×

முத்துப்பேட்டையில் திடீர் போலீஸ் குவிப்பால் பரபரப்பு

முத்துப்பேட்டை, செப்.29: முத்துப்பேட்டையில் பிஎப்ஐ அமைப்பினர் திடீர் போராட்டம் அறிவித்ததால் நூற்றுக்கணக்கான போலீஸ் குவிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதன் எதிரொலியாக நகரில் உள்ள அமைப்பின் நகர அலுவலகத்தில் விளம்பர போர்டு மற்றும் கொடிகளை அப்புறபடுத்தி பேரூராட்சி அருகே போராட்டம் நடைபெறும் என அந்த அமைப்பினர் அறிவித்திருந்தனர். இதனையடுத்து பேரூராட்சி அருகே திருவாரூர் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை, டிஎஸ்பி விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

மேலும் முக்கிய இடங்களில் நூற்றுக்கணக்கான போலீசார் நிறுத்தப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதற்கிடையே அமைப்பினர் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் இரவு வரை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் தஞ்சை சரக டிஐஜி கயல்விழி, திருவாரூர் எஸ்பி சுரேஷ்குமார் ஆகியோர் நேற்று வந்து பல்வேறு பகுதியில் போடப்பட்டுள்ள பாதுக்காப்பு பணிகளை ஆய்வு செய்து பாதுக்காப்பை உறுதி செய்தனர். மேலும் பல்வேறு காவல்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Muthuppet ,
× RELATED வாக்கு சாவடிக்குள் புகுந்து வாக்காளர்களை விரட்டிய குடிமகனால் பரபரப்பு