×

அழுந்தலைப்பூர் - கருடமங்கலம் இடையே ரூ.2.50 கோடி மதிப்பில் உப்பாற்றில் புதிய பாலம்

லால்குடி,செப்.29: லால்குடி அருகே ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் அழுந்தலைப்பூர் - கருடமங்கலம் இடையே பாலம் அமைக்கும் பணிகளை சவுந்திரபாண்டியன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் கருடமங்கலம் ஊராட்சியில் புள்ளம்பாடி அழுந்தலைப்பூர் வழியாக கருடமங்கலம் செல்லும் வழியில் உள்ள உப்பாற்றில் பாலம் கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு உத்தரவின் பேரில் நபார்டு திட்டத்தில் ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டும் பணிக்காக நிதி ஒதுக்கப் பட்டது.

இதைத்தொடர்ந்து பாலத்தின் கட்டுமானப் பணி தொடக்க விழா நடைபெற்றது. திருச்சி நெடுஞ்சாலை துறை நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் கோட்ட செயற்பொறியாளர் வடிவேல், புள்ளம்பாடி ஒன்றிய குழு தலைவர் ரசியாகோல்டன் ராஜேந்திரன் முன்னிலையில் லால்குடி சவுந்தரபாண்டியன் எம்எல்ஏ கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.
விழாவில் ஒன்றிய குழு துணைத் தலைவர் கனகராஜ், ஊராட்சி மன்ற தலைவர் கீதா ஜெயராமன், ஒன்றிய கவுன்சிலர்கள் வடிவேல், சுதா பெரியசாமி, ஜெயந்தி ராமச்சந்திரன், ஜெயபிரகாஷ் மற்றும் மதிவாணன், கனகராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் தர், இந்திரா அறிவழகன், செந்தாமரை கண்ணன், மற்றும் அதிகாரிகள் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Upadr ,Arunthalaipur ,Karudamangalam ,
× RELATED பைக் மீது லாரி மோதி பெண் உயிரிழப்பு