முத்தரசநல்லூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் உலகவெறிநோய் தடுப்பு தினம்

திருச்சி, செப்.29: திருச்சி மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் பிராணிகள் வதை தடுப்பு சங்கம் இணைந்து அந்தநல்லூர் ஒன்றியம், முத்தரசநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உலக வெறிநோய் தடுப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு முகாம் நடத்தினர். முகாமில் கால்நடை மருத்துவர் பிரியதர்ஷினி மேரி நாய்களுக்கு வெறி பிடிக்காமல் இருக்க எடுக்க வேண்டிய தடுப்பு முறைகள் குறித்து விளக்கி கூறினார். கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர்நாய் கடித்தால் செய்ய வேண்டிய முதலுதவி மற்றும் மருத்துவ நடவடிக்கைகள் குறித்து விளக்கிக் கூறினார். ஏஇஇஓ மருதநாயகம், பள்ளி ஆசிரியர், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

Related Stories: