திருவளர்சோலை கூட்டுறவு சங்கத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருச்சி, செப்.29: திருவளர்சோலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நேற்று திருச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மூலம் உறுப்பினர் கல்வி திட்டம் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருவளர்சோலை,பனையபுரம், உத்தமர்சீலி, கிளிக்கூடு, கொண்டையம்பேட்டை, ரங்கம், மேலூர், திம்மராயசமுத்திரம், வெள்ளித்திருமுத்தம் ஆகிய கிராமமக்கள் கலந்து கொண்டனர்.

இச்சங்கத்தில் நடந்த உறுப்பினர் கல்வித்திட்ட முகாமில் அந்தநல்லூர் ஒன்றிய கூட்டுறவு சார்பதிவாளர் கள அலுவலர் எம்.பீட்டர் லியோனார்டு கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார். நிகழ்ச்சியில் உத்தமர்சீலி பஞ்சாயத்து தலைவர் தேவராஜன், கவுன்சிலர் ராஜேந்திரன், சங்க நிர்வாக இயக்குநர் செந்தமிழ்செல்வன், சங்க செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: