×

திருவில்லிபுத்தூரில் சென்னை பெண்ணிடம் ரூ.10.50 லட்சம் வாங்கி மோசடி: 2 பேருக்கு வலைவீச்சு

திருவில்லிபுத்தூர், செப். 29: திசென்னையை சேர்ந்தவர் மீனா (33). இவர் அடிக்கடி தேனியில் உள்ள கோயில் ஒன்றிற்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். அப்போது இவருக்கு, தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகாவை சேர்ந்த செல்வகிருஷ்ணன் என்பவரின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் செல்வகிருஷ்ணன், மீனாவை போனில் தொடர்பு கொண்டு, ‘நீ ரூ.16 லட்சம் கொண்டு வந்தால், ரூ.22 லட்சம் உனக்கு கிடைக்கும்’ என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதையடுத்து மீனா, சென்னையில் ரூ.5 லட்சம் கடன் பெற்றும், தன்னிடம் இருந்த நகைகளை அடகு வைத்தும் என ரூ.10 லட்சத்து 50 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு திருவில்லிபுத்தூர் பஸ் நிலையத்துக்கு வந்துள்ளார்

அப்போது செல்வகிருஷ்ணன் கூறிய தகவல்படி, தென்காசி மாவட்டம் புதூர் பகுதியை சேர்ந்த பால்துரை என்பவரிடம் திருவில்லிபுத்தூர் பஸ் நிலையத்தில் வைத்து ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளதாக தெரிகிறது. பணம் பெற்று கொண்ட பிறகு 2 பேரது செல்போனும் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மீனா, இதுகுறித்து திருவில்லிபுத்தூர் நகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் கீதா உத்தரவின்பேரில் போலீசார் பணத்தை வாங்கி மோசடி செய்த 2 பேர் மீதும் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர். பஸ் நிலையத்தில் வைத்து இளம்பெண்ணிடம் பணத்தை ஏமாற்றி வாங்கி சென்ற சம்பவம் திருவில்லிபுத்தூர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Chennai ,Thiruvilliputhur ,
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...