×

சிவகாசி மாநகராட்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்குவதாக அரசு அறிவித்துள்ளது: மாமன்ற கூட்டத்தில் மேயர் தகவல்

சிவகாசி, செப்.29: சிவகாசி மாநகராட்சி கூட்டம் மேயர் சங்கீதாஇன்பம் தலைமையில் ேநற்று நடைபெற்றது. துணை மேயர் விக்னேஸ்பிரியா காளிராஜன், ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். பொறியாளர் ரமேஸ், உதவி ெபாறியாளர் அழகேஸ்வரி, சுகாதார அலுவலர்(பொ) சித்திக், வருவாய் ஆய்வாளர் சரவணன், மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மேயர் சங்கீதா இன்பம் பேசுகையில், ‘‘கடந்த அதிமுக ஆட்சியில் 2020 நவ.11ம் தேதி சிவகாசி நகராட்சி நூற்றாண்டு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு ரூ.49.2 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டது. அந்த அரசாணையில் எந்த தலைப்பின் கீழ் சிவகாசி நகராட்சி நூற்றாண்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என தெளிவாக குறிப்பிடப்படவில்லை. இதனால் நிதி ஒதுக்கீடு வரவில்லை.

இதனால் அடிப்படை பணிகள் பாதிக்கப்பட்டதுடன், நூற்றாண்டு நிதியில் ஒதுக்கப்பட்ட 55 திட்டப் பணிகள் ஆரம்ப கட்டத்திலேயே நின்றது. இந்நிலையில் புதிதாக திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் கடந்த அதிமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசாணையில் உள்ள தவறு திருத்தப்பட்டு கடந்த மார்ச் 3ம் தேதி உரிய தலைப்பு கொடுக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்து புதிய அரசாணை வெளியிடப்பட்டது. திருத்திய அரசாணைக்கு சட்டப்பேரவையில் ஒப்புதல் பெற வேண்டி உள்ளதால் நூற்றாண்டு நிதி வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அடுத்து வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சிறப்பு நிதிக்கு ஒப்புதல் பெறப்பட்ட பின் நிதி வந்துவிடும். சிறப்பு நிதி வந்து விட்டால் மாநகராட்சியில் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வரும் 75 சதவீத பணிகள் முடிவடைந்து விடும். மாநகராட்சிக்கு அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்துள்ளது. நிதி வந்தவுடன் சுகாதார பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்’’ என்றார்.

Tags : Government ,Sivakasi Corporation ,
× RELATED சிவகாசி மாநகராட்சி மக்கள் வரவேற்பு;...