மாற்றுத்திறனாளிகளுக்கு நேர்முகத் தேர்வு

தேனி, செப். 29: தேனி மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் முதுகுத் தண்டுவடம் பாதித்தவர்களுக்கு மூன்று சக்கர வாகனம் மற்றும் வீல் சேர் வழங்குவதற்கான நேர்முகத் தேர்வு நடந்தது. தேனி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், கை, கால் பாதிக்கப்பட்டவர்கள், முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூன்று சக்கர வாகனம், சக்கர நாற்காலி ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது. இதன்படி, நடப்பு ஆண்டான 2022/23ம் ஆண்டுக்கான இலவச வாகனங்கள் வழங்கும் வகையில், தேனி மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் வாகனங்கள் வழங்குவதற்கான நேர்முகத் தேர்வு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சகுந்தலா தலைமையில் நேற்று நடந்தது. இம்முகாமில் 64 பேர் கலந்து கொண்டனர். இம்முகாமின்போது, வங்கிக்கடன் மற்றும் நலவாரிய பதிவும் செய்யப்பட்டது. இம்முகாமில், எலும்பு முறிவு மருத்துவர் ராஜேஷ் குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் தகுதியானவர்களை தேர்வு செய்தனர்.

Related Stories: