கடமலைக்குண்டு பகுதியில் முருங்கை இலை பறிக்கும் பணி தீவிரம்

வருசநாடு, செப். 29: கடமலைக்குண்டு பகுதியில் முருங்கை இலை பறிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கடமலை மயிலை ஒன்றியத்துக்குட்பட்ட கண்டமனூர், எட்டப்பராஜபுரம், கணேசபுரம்,கோவிந்தநகரம் , கடமலைக்குண்டு, பாலூத்து, கொம்புகாரன்புலியூர், அய்யனார்கோவில், அய்யனார்புரம், டாணாதோட்டம், அண்ணாநகர், ஆத்தங்கரைபட்டி , லட்சுமிபுரம்,மயிலாடும்பாறை, உள்ளிட்ட பகுதிகளில் முருங்கை இலை மூலிகைக்கு பறிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். தற்போது ஒரு கிலோ விலை 80முதல் 85 ரூபாய் வரை சந்தையில் விலை போய்க் கொண்டிருப்பதாகவும் விவசாயிகள் தகவல் தெரிவித்துள்ளனர்,

இந்த மூலிகை இலையை மொத்த வியாபாரிகளும் சில்லரை வியாபாரிகளும் தேனி ஆண்டிபட்டி, கம்பம், மதுரை, திண்டுக்கல், பாண்டிச்சேரி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விலைக்கு வாங்கி முருங்கை இலைகளை பதப்படுத்தி வெளி மாநிலத்திற்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து கடமலை மயிலை ஒன்றியத்தில் உள்ள முருங்கை சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் முருங்கை இலைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவில் உள்ளது.இதற்காக முருங்கை இலைகள் பறிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் தனி மனிதரின் வருமானம் இரண்டு மடங்காக ஈட்டுவதற்கு தற்போதைய தருணத்தில் முருங்கை இலை உதவுகிறது. இந்த மூலிகை மூலிகை இலை பறிப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: