ஆரணி அடுத்த இரும்பேட்டில்)திருவிழாவில் பெண்களிடம் 30 சவரன் திருடிய 2 பெண்கள் குண்டாசில் கைது

ஆரணி, செப்.29: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த இரும்பேட்டில் வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில், கடந்த ஜூலை 30-ம் தேதி சினிவாச திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசம் செய்தனர். நிகழ்ச்சி முடிந்த பிறகு கோயில் சார்பில் லட்டு மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. அப்போது, பெண்கள் போட்டி போட்டு கொண்டு பிரசாதம் வாங்கி கொண்டு வெளியே வந்தபோது, 9 க்கும் மேற்பட்ட பெண்கள் கழுத்தில் அணிந்திருந்த தாலி செயின் உட்பட 30 சவரணன் நகைகள் திருபோனது. தொடர்ந்து, போலீசார் அங்குள்ள சிசிடிவி கேமராக்கள் பதிகளை வைத்து விசாரணை செய்ததில், நகை திருட்டில் ஈடுபட்டது பெண்கள் என்பதும், அவர்கள் இருவரும் திருச்சி சமயபுரத்தை சேர்ந்த சாந்தா(எ) சாந்தி(எ) செல்வி(எ) ராதா(35), மாரி(எ) லட்சுமி(37) என்பதும் தெரியவந்தது. உடனே, இருவரையும் தாலுகா போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைத்தனர்.

மேலும், இவர்கள் இருவரும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் மிக பெரிய நெட்வொர்க் அமைத்து திருவிழக்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சென்று, தொடர் திருட்டு, நகை மற்றும் பொருட்கள் திருட்டில் ஈடுபட்டு வருவதால், குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி கார்த்திகேயன், கலெக்டர் பா.முருகேஷ் ஆகியோருக்கு ஆரணி தாலுகா இன்ஸ்பெக்டர் புகழ் பரிந்துரை செய்தனர். இதுதவிர, கண்ணமங்கலம் அருகே உள்ள ஆத்துவம்பாடி கிராமத்தை சேர்ந்த சின்னராசு (33) பொதுமக்களிடம் ரவுடியிசத்தில் ஈடுபட்டு வந்தார். இவரை சந்தவாசல் போலீசார் கடந்த வாரம் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்.பி. கலெக்டருக்கு பரிந்துரைத்து இருந்தார். அதன்பேரில், கலெக்டர் முருகேஷ் உத்தரவின்பேரில், சாந்தா(எ)ராதா மற்றும் மாரி(எ)லட்சுமி, சின்னராசு ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில், வேலூர் பெண்கள் தனிச்சிறையில் உள்ள இருவரிடம் குண்டர் சட்டத்தில் செய்வதற்கான உத்தரவும் ஆண்கள் சிறையில் சின்னராசுவிடமும் நகலை இன்ஸ்பெக்டர் புகழ் நேற்று வழங்கினார்.

Related Stories: