×

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பெருந்திட்ட வளாக பணிகள் துவக்கம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்பு

திருச்செந்தூர்,செப்.29: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ரூ.300 கோடியில் பெருந்திட்ட வளாகப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி மூலம் தொடங்கி வைத்தார். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ரூ.300 கோடி மதிப்பில், கோயில் கும்பாபிஷேகம், பிரகார மண்டபம் உள்பட பல்வேறு பெருந்திட்ட வளாக பணிகள் நடைபெற உள்ளன. இதற்கான தொடக்க விழா நேற்று நடந்தது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் இப்பணிகளை தொடங்கி வைத்தார்.

 திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா எம்எல்ஏ, கலெக்டர் செந்தில்ராஜ், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கண்ணன், மண்டல இணை ஆணையர் அன்புமணி, திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன், அறங்காலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில்முருகன், கோயில் மேலாளர் சிவநாதன், மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், நகராட்சி சேர்மன் சிவஆனந்தி, துணைத்தலைவர் செங்குழி ரமேஷ், மாவட்ட பஞ். கவுன்சிலர் பிரம்மசக்தி, ஆழ்வை யூனியன் சேர்மன் ஜனஹர், ஒன்றிய செயலாளர்கள் இளங்கோ, நவீன்குமார், சதீஸ்குமார், பாலசிங், ஜெயகுமார், நகர செயலாளர் வாள்சுடலை, கவுன்சிலர்கள் சுதாகர், செந்தில்குமார், ஆனந்த சுப்பிரமணியன், முத்து கிருஷ்ணன், முத்துஜெயந்தி, லீலா, ரேவதி, தினேஷ், மாவட்ட துணை அமைப்பாளர்கள் பொன்முருகேசன், ராஜமோகன், இசக்கிமுத்து, வீரமணி, ரவி, மாவட்ட அமைப்பாளர்கள் தர்ரொட்ரிக்கோ, ராஜபாண்டியன், பிரைவின், தங்கபாண்டியன், காயல்பட்டினம் நகராட்சி சேர்மன் முத்துமுகம்து, கவுன்சிலர் சுகு, டிசிடபுள்யு ஆறுமுகம், ராமச்சந்திரன், சுரேஷ்பாண்டி, ஜெபமாலை, ரஜூலா, ஆனந்தரொட்ரிக்கோ, கோமதிநாயகம் உள்பட திரளானோர்  கலந்து கொண்டனர்.

Tags : Minister ,Anitha Radhakrishnan ,Tiruchendur Subramaniaswamy Temple ,
× RELATED ஒன்றியத்தில் சமதர்ம ஆட்சி அமைந்திட...