1046 வளர்ப்பு பிராணிகளுக்கு தடுப்பூசி

ராமநாதபுரம், செப்.29: ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,046 வளர்ப்பு பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் வளர்ப்பு பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம் நடந்தது. கூடுதல் ஆட்சியர் பிரவீன் குமார் தொடங்கி வைத்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 கால்நடை மருத்துவமனைகள், 55 மருந்தகங்களில் நடந்த முகாம்களில் 1046 வளர்ப்பு பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் இளங்கோவன், தேவிபட்டினம் கால்நடை மருத்துவர் செங்குட்வன், கால்நடை மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: