×

விவசாயிகளுக்கு யூரியா வினியோகம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

பரமக்குடி,செப்.29: பரமக்குடி பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு யூரியா வினியோகத்தை பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் தொடங்கி வைத்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் 312 மீ.மீ மழை அளவு பெறப்பட்டுள்ள நிலையில், சம்பா பருவத்திற்கான விதைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் இதுநாள் வரை 31,036 ஏக்கர் பரப்பளவில் நெல், சிறுதானியங்கள், பயிறு வகை பயிர்கள் விதைப்பு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்திற்கு செப்.2022 மாதத்திற்கு மட்டும் வினியோகம் செய்திட திட்டமிடப்பட்டிருந்த 4,695 மெ.டன் யூரியாவில் இதுவரை 2,520 மெ.டன் யூரியா மாவட்டத்தின் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 20.250 மெ.டன் கிரிப்கோ யூரியா வரப்பெற்றுள்ளது. இதனை பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் பார்வையிட்டு விவசாயிகளுக்கு விநியோகத்தினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குனர்(பொ) கண்ணையா,வேளாண்மை துணை இயக்குனர் பாஸ்கர மணியன், வேளாண்மை உதவி இயக்குனர் நாகராஜன், பரமக்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மனோகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags : MLA ,
× RELATED வியாபாரியை தாக்கியதாக அதிமுக...