×

ஊராட்சி செயலர்களுக்கு வாராந்திர ஆய்வு கூட்டம்

ஆர்.எஸ்.மங்கலம்,செப்.29: ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலர்களுக்கான வாராந்திர ஆய்வு கூட்டம் மண்டல அலுவலர் முத்துச்சாமி தலைமையில் நடைபெற்றது. இதில் பிடிஒகள் மலைராஜன்,முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகுத்தனர். இக்கூட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் நிலுவை பணிகள் குறித்தும் விளக்கம் கேட்கப்பட்டது. பிடிஒ மலைராஜன் பேசுகையில், வருகிற அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்களை நடத்திட வேண்டும்.

அதேபோல் அரசு பள்ளி கட்டிடங்களில் எங்கெல்லாம் சுற்றுச்சுவர் இல்லாமல் உள்ளதோ அவற்றை தெரியப்படுத்த வேண்டும். குறுங்காடுகளை நன்கு தண்ணீர் ஊற்று பராமரித்திட வேண்டும். பொதுமக்களுக்கான அடிப்படை தேவைகள் குறித்தும் தெரியப்படுத்திட வேண்டும். இவை அனைத்தும் ஒவ்வொரு ஊராட்சி செயலர்களும் கடைபிடித்திட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Tags : Panchayat Secretaries ,
× RELATED கோவை மாவட்டத்தில் ஊராட்சி செயலாளர்கள் 84 பேர் பணியிட மாற்றம்