×

பாஜவை ஆட்சிக்கு வர வைக்க கூடாது: திருமாவளவன் எம்பி பேச்சு

மதுரை, செப். 29: மதுரை அண்ணாநகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மணி விழா மற்றும் சனாதான பொதுக்கூட்டம் நேற்றிரவு நடந்தது. இதில் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டு பேசினர். இக்கூட்டத்தில் திருமாவளவன் எம்பி பேசும்போது, ``கார்ப்பேரட்டுக்கு வேலை செய்யும் ஊழியர்கள் தான் பிரதமரும், உள்துறை அமைச்சரும். இது இந்தியாவிற்கே வெட்க கேடு. அம்பானிக்கும், அதானிக்கும் வேலைக்காரர்கள் தான் மோடியும், அமித்ஷாவும். பாப்புலர் ப்ரன்ட் ஆப் இந்தியாவை தடை செய்த நிலையில் ஆர்எஸ்எஸ்சை ஏன் தடை செய்யவில்லை, இந்தியாவில் நடக்கும் அனைத்து கலவரங்களுக்கும், ஆர்எஸ்எஸ்சும் அவர்களது சிந்தனைகளும்தான் காரணம்.

தமிழகத்தில் சனாதான கொள்கைக்கு எதிராக அனைத்து கட்சிகளையும் கூட்டணியாக அமைத்து இந்தியாவிற்கே உதாரணமாக உள்ளார் முக.ஸ்டாலின். காங்கிரஸ் பாஜவை வீழ்த்தட்டும் என வேடிக்கை பார்க்க வேண்டாம், இப்போது அபாயகரமான காலத்தில் உள்ளோம், இந்த முறை பாஜவை ஆட்சிக்கு வர வைக்க கூடாது, தமிழகத்தை தாண்டி அதிமுக, பாமக உட்பட அனைவரும் சனாதானத்திற்கு எதிராக ஓரணியில் திரள வேண்டும்’’ என்றார். இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், சனாதானம் படையெடுத்து வந்தபோது பெரியார் ஊழிட்டு எரிந்தார், பின்பு அண்ணா வந்தார், பின் கலைஞர் வந்தார், தற்போது ஸ்டாலின் வந்துள்ளார். தேசிய இனங்களின் தனித்தன்மையை ஒழித்துவிட்டு ஹிந்தி,சமஸ்கிருதம் என கொண்டுவர முயற்சிக்கின்றனர்.

சனாதானத்திற்கு எதிராக தென் மாநிலங்களுக்கு தமிழகம் தான் தலைமை தாங்க வேண்டும், என்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேசுகையில், திருமாவளவன் தனது மணிவிழாவில் சனாதானத்திற்கு எதிரான சக்திகளை ஒன்றிணைத்து பொதுக்கூட்டம் மூலமாக பொதுமக்களுக்கு நாட்டின் அபாயத்தை எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார். அ.ராசா எதையும் தவறாக பேசவில்லை, மனுசாஸ்திரம் குறித்து அவர் கூறியதை நான் வழிமொழிகிறேன். மது தர்மத்தில் இருப்பதை பேசினால் அண்ணாமலைக்கு ஏன் கோபம் வருகிறது. 2024ல் மக்கள் பாஜகவை வீட்டிற்கு அனுப்ப காத்திருக்கின்றனர், என்றார்.

Tags : Baja ,Tirumavalavan ,
× RELATED உதவியாளர்களிடம் ரூ.4 கோடி பறிமுதல்...