பத்ரகாளியம்மன் கோயிலில் கொலு

திருச்செங்கோடு, செப்.29: திருச்செங்கோடு பத்ரகாளியம்மன் கோயிலில், நவராத்திரி விழா நேற்று முன்தினம் தொடங்கியது. இரண்டாம் நாள், பிரமாண்டமான கொலு வைத்து 108 திரவிய பொருட்களால்  அம்பிகைக்கு அலங்காரம் செய்து, பூஜைகள் நடத்தப்பட்டது. கொலுவில் திருமணம், வளைகாப்பு, காதணி விழா என ஒரு குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளை குறிக்கும் வகையிலும், கிருஷ்ணனின் லீலைகளை குறிக்கும் வகையிலும், அகத்தியர் உள்ளிட்ட முனிவர்கள் சிவனை வழிபடும் விதமாகவும் கூடிய பல்வேறு தெய்வ உருவங்களுடனும் அமைக்கப்பட்டிருந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு மகிழ்ந்தனர். வரும் புதன்கிழமை வரை தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. வரும் 3ம் தேதி புத்தகம், நோட்டு,  பேனா போன்ற பொருட்களால் ஞானசரஸ்வதி அம்பாள் அலங்காரம் நடக்க உள்ளது. சிஎச்பி காலனி அருள்மாரியம்மன் கோயிலிலும் கொலு வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. அம்மனை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Related Stories: