ஒட்டன்சத்திரம் வனப்பகுதியில் யானைகள் நடமாட்டத்தை அறிய 4 இடங்களில் கண்காணிப்பு கோபுரம்: விவசாயிகள் கோரிக்கை

பழநி, செப். 29: யானைகளின் நடமாட்டத்தை அறிய 4 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்க வேண்டுமென விவசாயிகள் கேரிக்கை விடுத்துள்ளனர். பழநி மற்றும் ஒட்டனன்சத்திரம் வனப்பகுதியில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக யானைகள் நடமாட்டம் அதிகளவு இருந்து வருகிறது. இதனை தடுக்க வனத்துறையினர் அகழி அமைத்தல், சோலார் மின்வேலி அமைத்தல், வேட்டை தடுப்பு காவலர்களை பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொண்டனர். இந்நிலையில் பழநி வனப்பகுதியில் தேக்கந்தோட்டம், ஆண்டிபட்டி பகுதிகளில் வனப்பகுதிகளில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளன.

 அதுபோல் யானைகள் நடமாட்டம் அதிகளவு உள்ள ஒட்டனசத்திரம் வனப்பகுதிகுட்பட்ட சத்திரப்பட்டி வரையிலான பகுதிகளுக்கிடேயேயான 22 கிலோமீட்டர் தூர பகுதியில் நான்கு கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தால் யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க முடியும். சட்டப்பாறை, வரதாபட்டிணம், கோம்பைபட்டி, உள்கோம்பை ஆகிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைப்பதன் மூலம் யானைகள் நடமாட்டம் மட்டுமின்றி, வெளியாட்கள் நடமாட்டம் போன்றவற்றையும் கண்காணிக்க முடியுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: