₹15 லட்சத்தில் புதிய சாலை

சேந்தமங்கலம், செப்.29:  புதுச்சத்திரம் ஒன்றியம், நவணி ஊராட்சி வெள்ளாளப்பட்டியில் உள்ள அத்தாயி அம்மன் கோயிலுக்கு சாலை வசதி இல்லாததால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிரமப்பட்டு வந்தனர். இதுகுறித்த பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் பேரில், ஊராட்சி நிர்வாகம் சார்பில், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ், புதிய சாலை அமைக்க ₹15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜை நேற்று ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி தலைமையில் நடந்தது. புதுச்சத்திரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளரும், அட்மா குழு துணை தலைவருமான கௌதம், பணியை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் புஷ்பராணி, வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: