நிலக்கோட்டையில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

நிலக்கோட்டை, செப். 29:தமிழக அரசு போதை பெருட்கள் ஒழிப்பில்  தீவிரம் காட்டி வரும் நிலையில், அதன் ஒரு பதியாக திண்டுக்கல் மாவட்டம்  முழுவதும் தடைசெய்யப்பட்ட கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை  தடுத்து முற்றிலும் ஒழிக்க தென்மண்டல ஐஜி அஸ்ராகார்க்  அறிவுறுத்தியுள்ளார். அதன்படி மாவட்ட எஸ்பி பாஸ்கரன் உத்தவின்  பேரில் நிலக்கோட்டை டிஎஸ்பி முருகன் தலைமையில் நிலக்கோட்டை  தாலுகாவிற்குட்பட்ட 7 காவல் நிலைய பகுதிகளிலும், பொதுமக்கள் அதிகம் கூடும்  இடங்களான பஸ்நிலையம், பேரூராட்சி- தாலுகா அலுவலகம், தினசரி மார்கெட்  பகுதிகளில் இலவச தொலைபேசி எண்ணுடன் கூடிய தகவல் பலகையை வைத்துள்ளனர்.  

மேலும் உறுதியான தகவல் தெரிவிப்பவர்களில் விபரம் ரகசியம் காக்கப்படும் எனவும், இதனால் பொதுமக்கள் போதை பொருட்கள் விற்பனை குறித்த தகவல்களை  தாராளமாக தெரிவிக்கலாம் எனவும் போலீசார் அறிவுறுத்தினார்.

Related Stories: