விபத்தில் இறந்த டிரைவர் உடலை போலீசுக்கு தெரிவிக்காமல் எரிப்பு

தர்மபுரி, செப். 29: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த திருமல்வாடி அருகே ஈச்சம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் மகன் பெருமாள் (19). டிராக்டர் டிரைவர். இந்நிலையில், பெருமாள் மாரண்டஹள்ளி அடுத்த ஏர்ரகுட்டஅள்ளியில் கடந்த சில வாரங்களுக்கு அரசு நிலத்தை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென நிலை தடுமாறிய டிராக்டர் கவிழ்ந்தது. இதில் டிராக்டரின் அடியில் சிக்கி பெருமாள் பரிதாபமாக உயிர் இழந்தார். ஆனால் போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை, குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எரித்துவிட்டனர். இதனிடையே இதுபற்றி சீரியம்பட்டி விஏஓ மோகனபிரியனுக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதுகுறித்து அவர் மாரண்டஹள்ளி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் சண்முகம் மற்றும் உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: