குட்கா விற்ற கடைக்கு சீல்

காரிமங்கலம், செப்.29: காரிமங்கலத்தில், தடை செய்யப்பட்ட குட்கா பொருள் விற்பனை செய்த மளிகை கடைக்கு, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர். காரிமங்கலம் தாலுகா, திருப்பத்தூர் மெயின் ரோட்டில், திப்பம்பட்டி கூட்ரோடு அருகே செயல்பட்டு வரும் மளிகை கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்தது கண்டறியப்பட்டு, 2 முறை அபராதம் மற்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அந்த மளிகை கடையில் தொடர்ந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக வந்த புகாரின் பேரில், கலெக்டர் சாந்தி தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் பானுசுஜாதா, வட்டார அலுவலர் நந்தகோபால் மற்றும் குழுவினர் சம்பந்தப்பட்ட கடையில் சோதனை மேற்கொண்டதில், குட்கா பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட கடைக்கு, போலீஸ் பாதுகாப்புடன் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர்.

Related Stories: