×

கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர் சேர்க்கை

கடலூர், செப். 29: சிதம்பரம் வட்டம் கிள்ளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கடன் மேளா கடலூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மூலம் நடத்தப்பட்டது.
கடலூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குநர் மஞ்சுளா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டுறவு சங்கங்களில் 18 வயது நிரம்பியவர்கள் அனைவரும் உறுப்பினராகலாம். கூட்டுறவு கடன் சங்கங்களில் வட்டியில்லா பயிர்க்கடன் மற்றும் நகைக்கடன், கறவைமாடு கடன், சிறு பால்பண்ணை கடன் கால்நடை பராமரிப்பு கடன், மாற்றுத்திறனாளி கடன், மிக குறைந்த வட்டியில் மகளிர் சுயஉதவிக் குழு கடன், விதவைகள், ஆதரவற்ற விதவைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கடன் மற்றும் மாற்றுத்திறனாளி கடன் வழங்கப்படுகிறது. எனவே விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உறுப்பினராக சேர்ந்து பயனடையலாம் என விளக்கப்பட்டது. புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் சேர்க்கை படிவம் மற்றும் புதிய கடன் வழங்கப்பட்டது. கிள்ளை கூட்டுறவு சங்க செயலாளர் வெங்கடேசன், இயக்குநர் பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Cooperative Federation ,
× RELATED காந்தி ஜெயந்தி, மிலாடி நபி 2 நாட்கள் மதுக்கடைகளை மூட உத்தரவு