×

அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்ற கூட்டம்

சிதம்பரம், செப். 29: சிதம்பரம் அருகே அண்ணாமலை நகர் சிறப்பு நிலை பேரூராட்சியில், மன்ற கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சி மன்ற தலைவர் பழனி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் தமிழ் செல்வி, செயல் அலுவலர் பாலமுருகன் முன்னிலை வகித்தனர். இதில் அனைத்து வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில், 15வது நிதி மானியம் திட்டத்தின் கீழ் ரூ.38.40 லட்சத்தில் நிர்வாகம் அனுமதி பெற்று பணிகளான மண்ரோடுகுப்பம், குறுக்கு தெருக்களில் பேவர் பிளாக் சாலை, மற்றும் வடிகால் அமைத்தல் பணி, கழிவறைகள் புதுப்பித்தல் பணி, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் புனரமைப்பு செய்தல் ஆகிய பணிகளை பேரூராட்சி மன்ற தலைவர் உறுப்பினர்களிடம் கூறினார்.
புதிய பணிகள் துவங்க உள்ள ரூ.15 லட்சத்தில் வடக்கிருப்பு தபால் நிலையம் எதிரில் கழிவறை அமைத்தல் பணி மற்றும் ரூ.87 லட்சத்தில் மூன்று இடங்களில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி பற்றியும் விவாதிக்கப்பட்டது.

Tags : Anamalai ,Nagar ,
× RELATED பாஜக நிர்வாகியின் குற்றத்தை தெரிந்தே...