×

கடலூர் மாவட்டத்திற்கு 2,775 மெட்ரிக் டன் யூரியா வந்தது

கடலூர், செப். 29: கடலூர் மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் நெல் 22,924 ஹெக்டர், மக்கா சோளம் 18,936 ஹெக்டர், பருத்தி 2,156 ஹெக்டர், கரும்பு 15,399 ஹெக்டர் என மொத்தம் 59,415 ஹெக்டர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது கடலூர் மாவட்டத்தில் யூரியா-4576.7 மெ.டன், டி.ஏ.பி-2,160.3 மெ.டன், பொட்டாஷ்-1,514.9 மெ.டன், காம்ப்ளக்ஸ்-5,647.4 மெ.டன் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரவிற்பனை நிலையங்களில் இருப்பு உள்ளது. கடந்த வாரம் இம்மாவட்டத்திற்கு 2,775.5 மெ.டன் யூரியா ரயில் மூலம் பெறப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 1,396.8 மெ.டன் மற்றும் தனியார் உரக்கடைகளில் 1,378.7 மெ.டன் இருப்பு வைக்கப்பட்டது.

இந்த ஆண்டு கடலூர் மாவட்டத்திற்கு இதுநாள் வரை 26,569.5 மெ.டன் யூரியா, 6,801 மெ.டன் டி.ஏ.பி, 4,121 மெ.டன் பொட்டாஷ் மற்றும் 17,540 காம்ப்ளக்ஸ் உரங்கள் பெறப்பட்டு, 22,558 மெ.டன் யூரியா, 6,480 மெ.டன் டி.ஏ.பி., 4,097 மெ.டன் பொட்டாஷ், 18,308 மெ.டன் காம்ப்ளக்ஸ் மற்றும் 1,735 மெ.டன் சூப்பர் உரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.உரவிற்பனையாளர்கள் அனைவரும் இருப்பை ஒழுங்காக பராமரித்து அதிகபட்ச சில்லரை விலைக்கு மிகாமல் விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். உர பதுக்கல் தொடர்பாக ஏதேனும் புகார்கள் வரப்பெற்றால் உர விற்பனை நிலையங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும், என கடலூர் வேளாண்மை இணை இயக்குநர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags : Cuddalore district ,
× RELATED வரதட்சணை கொடுமை வழக்கில்...