மில்க் ஷேக் தயாரித்ததில் நஷ்டம் இளம்பெண் தற்கொலை: போலீஸ் விசாரணை

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் செல்வம்  முருகன். சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர். இவருக்கு இரண்டு மகள்கள். மூத்த  மகள் ஸ்வேதா (28). இவர் பிஇ படித்துள்ளார். பிறகு சக நண்பர்கள் 4 பேருடன்  சேர்ந்து மில்க் ஷேக் தயாரித்து விற்பனை செய்யும் தொழிலை 4 வருடங்களாக செய்து வந்தார். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு வருவாய் கிடைக்காததால்  நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்காக வங்கியில் வாங்கிய கடனை கேட்டு வங்கி ஊழியர்கள் வீட்டிற்கு வந்துள்ளனர். இதனால் தந்தை ஸ்வேதாவை கண்டித்துள்ளார். மேலும், சக மாணவன் ஒருவரை காதலித்து உள்ளார். அதிலும்  பிரச்னை ஏற்பட்டுள்ளது.

மில்க் ஷேக் தொழிலில் 10 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, கடந்த 4 மாதங்களாக மனவிரக்தியில் இருந்துள்ளார் ஸ்வேதா. நேற்று முன்தினம் இரவு ஸ்வேதா படுக்க  சென்றுள்ளார். நேற்று அதிகாலை தந்தை பாத்ரூம் போக எழுந்தபோது ஸ்வேதா தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரை மீட்டார். ஆனால், அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. தகவலறிந்து, தண்டையார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் வந்து வழக்கு பதிவு செய்து ஸ்வேதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். முதற்கட்ட விசாரணையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

Related Stories: