மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

திருவொற்றியூர்: எண்ணூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் கமலா தலைமை வகித்தார். கவுன்சிலர் சிவகுமார் முன்னிலை வகித்தார். இதில், கே.பி.சங்கர் எம்எல்ஏ கலந்துகொண்டு 329 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார். அப்போது, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும் என்று எம்எல்ஏ கே.பி.சங்கரிடம் கோரிக்கை வைத்தனர்.

அதற்கு தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து விரைவில் இந்த பணியை செய்து தருவதாக உறுதியளித்தார். மேலும், கவுன்சிலர் கோமதி சந்தோஷ், திமுக நிர்வாகி ராமநாதன், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் சண்முகம், கண்ணன், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: