11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; முதியவருக்கு 20 ஆண்டு சிறை: போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: கடந்த 2019 நவம்பரில் சென்னையை சேர்ந்த 11 வயது சிறுமி கடைக்கு சென்றபோது, 64 வயதான முருகன் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் முருகன் மீது இந்திய தண்டனை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து முருகன் கைது செய்யப்பட்பட்டார். வழக்கு சென்னை போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது.

சிறுமி நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி, குற்றவாளி முருகனுக்கு போக்சோ சட்டப்பிரிவில் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், இந்திய தண்டனை சட்டப் பிரிவில் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்த சிறை தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.

Related Stories: