ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயற்சி?

உளுந்தூர்பேட்டை,  செப். 28: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள  உ.செல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு மகன்  அரிகோவிந்தன். இவரது மனைவி சுதா, உ.செல்லூர் ஊராட்சி மன்ற தலைவராக  உள்ளார். சம்பவத்தன்று இவருக்கு சொந்தமான பாச்சாப்பாளையம்  எல்லையில் உள்ள கரும்பு வயலுக்கு அரிகோவிந்தன் தண்ணீர் பாய்ச்ச சென்ற போது மோட்டார்  கொட்டகை அருகில் இருந்த ஒயரில் இருந்து மின்சாரம் தாக்கி தடுமாறி கீழே  விழுந்தார். சிறிய ஒயரில் அருகில் உள்ள ஸ்டார்ட்டர் பெட்டியில்  இருந்து மின்சாரம் இணைப்பு கொடுக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி  அடைந்தார். இதையடுத்து  தன்னை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயன்றதாக 3 பேர் மீது அரிகோவிந்தன் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில்  சப்-இன்ஸ்பெக்டர் அருட்செல்வன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.  ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்ற சம்பவம்  உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: