நவராத்திரியை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயிலில் 30 அடி உயரத்தில் கொலு

சிதம்பரம், செப். 28: சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோயிலில் சாரதா நவராத்திரியை முன்னிட்டு, 21 படிகளில் 30 அடி உயரத்தில் பிரமாண்டமான கொலு வைக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் கடவுளின் வடிவம் என்பதை உணர்த்தும் வைபவமே நவராத்திரி கொலு. இதில் தெய்வ உருவங்களான விநாயகர் முதல் மிருகங்கள் வரை பறவைகள், காய், கனிகள் என எல்லா உருவங்களையும் சேர்த்து சுமார் 2500 பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த ஒன்பது தினங்களிலும் சிவகாமசுந்தரி அம்பாள், நவராத்திரி அம்பாள் ஆகியோர்களுக்கு வெள்ளி ஊஞ்சலில் ஊஞ்சல் உற்சவம் மற்றும் தீபாராதனை நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை  தரிசனம் செய்து வருவார்கள்.

Related Stories: