தெரு நாய்களை பிடிக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

திட்டக்குடி, செப். 28: திட்டக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் மற்றும் பல்வேறு இடங்களில் வெறி பிடித்த தெரு நாய்கள் சாலையில் நடந்து செல்லும் நபர்களையும், தெருக்களில் விளையாடி கொண்டிருக்கும் சிறுவர்களையும் கடித்து குதறி வருகின்றன. இதுபோன்ற நாய்களை பிடிக்க வலியுறுத்தி பெரியார் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அப்பகுதியில் திடீரென அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திட்டக்குடி நகராட்சி ஆணையர் ஆண்டவன், நகரமன்ற தலைவர் வெண்ணிலா கோதண்டம், துணை தலைவர் பரமகுரு, இன்ஸ்பெக்டர் அன்னக்கொடி ஆகியோர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வெறி பிடித்த நாய்களை பிடித்து, கால்நடை மருத்துவர்கள் மூலம் பரிசோதனை செய்து ஊசி போடப்படும் என தெரிவித்தனர். இதனை ஏற்ற போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories: