×

முதலிபாளையம் பகுதியில் உள்ள பாறைக்குழிக்கு வரும் குப்பை வாகனம் குறித்து மேயர் ஆய்வு

திருப்பூர், செப். 28: திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளிலும் குப்பைகளை அகற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குப்பை இல்லாத மாநகரமாக திருப்பூரை மாற்ற பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். இதுபோல் தேவைப்படுகிற வார்டுகளுக்கு கூடுதலாக குப்பை தொட்டிகளும், குப்பைகளை சேகரிக்க பணியாளர்களையும் வார்டு உறுப்பினர்களின் கோரிக்கைளுக்கு ஏற்ப நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இதுபோல் மாநகராட்சி பயன்பாட்டிற்கு தேவையான குப்பை அள்ளும் வாகனங்கள் பழுதாகி இருந்ததையும், பழுது நீக்கி பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் மாநகராட்சிக்கு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் முறையாக பாறைக்குழிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறதா? என்பதையும் கண்காணித்து வருகிறார். இதற்கிடையே திருப்பூர் முதலிபாளையத்தில் மாநகராட்சிக்கு குப்பைகளை கொட்டும் பாறைக்குழிக்கு சென்ற மேயர் தினேஷ்குமார் அங்கு, மாநகராட்சிக்கு சொந்தமான வாகனங்கள் எத்தனை குப்பைகளை வந்து கொட்டுகிறது? என்பதை ஆய்வு செய்தார். மேலும், பிற வாகனங்கள் குப்பைகளை கொட்டுகிறதா? எனவும் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அங்கு வந்த குப்பை வண்டி டிரைவர்களிடம் உரிய முறையில் குப்பைகளை கொண்டு வர வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

Tags : Mayor ,Mudalipalayam ,
× RELATED ஈக்வடார் நாட்டின் மேயர் பிரிஜிட்...