கோவையில் இன்று வைகோ ஆவணப்படம் வெளியீடு  அமைச்சர் செந்தில் பாலாஜி  கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு

கோவை, செப். 28: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் 56 ஆண்டு கால அரசியல் அனுபவத்தை உள்ளடக்கி ‘’மாமனிதன் வைகோ’’ என்ற தலைப்பில் மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ ஆவணப்படம் தயாரித்துள்ளார். இது, 70 நிமிடம் ஓடக்கூடியது. இதன் வெளியீட்டு விழா கோவை கே.ஜி காம்ப்ளக்ஸ் ராகம் தியேட்டரில் இன்று (செவ்வாய்) மாலை 4 மணிக்கு நடக்கிறது. தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை தாங்குகிறார். கோவை மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார் வரவேற்கிறார். மதிமுக மாவட்ட செயலாளர்கள் பி.என்.ராஜேந்திரன் (கோவை வடக்கு), குகன்மில் செந்தில் (கோவை தெற்கு) ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

இதில், கோவை தொகுதி எம்.பி. பி.ஆர்.நடராஜன், பொள்ளாச்சி தொகுதி எம்.பி. சண்முகசுந்தரம், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றிச்செல்வன், கோவை மாவட்ட திமுக செயலாளர்கள் நா.கார்த்திக், தளபதி முருகேசன், தொண்டாமுத்தூர் ரவி, மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் கருப்புசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சிவசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பத்மநாபன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொருளாளர் ஆறுமுகம், தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை மண்டல தலைவர் சுசி.கலையரசன், கொமதேக மாவட்ட செயலாளர்கள் பிரேம், தனபால், ராதாகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பஷீர்அகமது உள்பட பலர் வாழ்த்துரை வழங்குகின்றனர். மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ ஏற்புரையாற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகளை மதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆர்.ஆர்.மோகன்குமார், பி.என்.ராஜேந்திரன், குகன்மில் செந்தில் உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகள் செய்துள்ளனர்.

Related Stories: