கலெக்டர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

கோவை, செப்.28: கோவை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் நடந்த கூட்டத்தில், பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கை அடங்கிய மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர். மனுக்களை பெற்ற கலெக்டர், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக கோவையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், கலெக்டர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீசார் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பொதுமக்கள் மற்றும் அலுவலக பணிக்காக வந்த நபர்கள் என அனைவரையும் மெட்டல் டிடெக்டர் மூலம் தீவிர சோதனை செய்த பின்னரே அலுவலகத்திற்கு உள்ளே அனுமதித்தனர். மேலும், குறைதீர்ப்பு கூட்டத்தில் தாசில்தார்கள் பலர் பங்கேற்கவில்லை. அவர்கள், பாதுகாப்பு உள்ளிட்ட நடவடிக்கையினால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தெரிகிறது.

Related Stories: