தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கல்லூரி மாணவிகள் சேமிப்பு கணக்கு தொடங்குவதில் தாமதம் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கிருஷ்ணராயபுரம், செப்.28: கிருஷ்ணராயபுரம் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் தமிழக அரசு அறிவித்த தங்கமகள் திட்டத்தின் கீழ் உதவி தொகை பெற கல்லூரி மாணவிகள் வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்குவதில் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். தமிழக அரசு கொண்டுவந்துள்ள தங்கமகள் திட்டமானது பெண் கல்வியை ஊக்குப்படுத்தும் விதத்தில் அறிவிக்கப்பட்ட திட்டமானது மக்கள் கிடையே வரவேற்க தக்க நல்ல திட்டமாக உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற கல்லூரியில் பயலும் மாணவியர்களின் வங்கி கணக்கில் நேரடியாக உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. அதற்காக வங்கி கணக்கு தொடங்குவது அவசியம் உள்ளது.

பெரும்பாலும் கல்லூரிகளில் எஸ்பிஐ வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்க வலியுறுத்தப்படுவதாக கூறப்படுகிறது.கிருஷ்ணராயபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவியர்கள் கிருஷ்ணராயபுரத்தில் உள்ள வங்கிகளில் அணுகும் போது வங்கி சேமிப்பு கணக்கிற்காக ரூ.1000 முதல் ரூ.2000 வரை இருப்புத் தொகையாக செலுத்தி தான் சேமிப்பு கணக்கு தொடங்கப்படும் என கூறப்படுகிறது. வங்கிகளில் பெரும்பாலும் கல்லூரி மாணவிகளை சேமிப்பு கணக்கு தொடங்க சென்றால் இன்று போய் நாளை வா, இன்று போய் நாளை வா என்று அலையளிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அப்படியும் வந்து சேமிப்பு கணக்கை தொடங்கினாலும் ஒரு வாரத்திற்கு மேல் பாஸ் புத்தகம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் கல்லூரிகளுக்கு தொடர்ந்து விடுப்பு எடுக்க நேரிடுவதால் மாணவிகள் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் உதவித்தொகை பெறுவதற்கான சேமிப்பு கணக்கு தொடங்குவதில் இருப்பு தொகை இல்லாமல் ஜீரோ பேலன்ஸ் (நோ பில்) சேமிப்பு கணக்கு தொடங்கவும் வங்கிகள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விரைவில் சேமிப்பு கணக்கு தொடங்கி தருதல் குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: