அரவக்குறிச்சி ஒன்றியத்தில் காலாண்டு தேர்வுகள் துவக்கம்

அரவக்குறிச்சி . செப். 28: முதல் பருவம் என அழைக்கப்படும் காலாண்டுத் தேர்வுகள் அரவக்குறிச்சி ஒன்றியத்தில் பள்ளிகளில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. அரவக்குறிச்சி ஒன்றியத்தில் 95 தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் முதல்,இரண்டு, மூன்று வகுப்பு மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி அடிப்படையில் ஆப் (செயலி) மூலமாக மாணவர்களுக்கு அவர்களின் எமிஸ் எண்கள் அடிப்படையில் தேர்வு நடைபெற்று ஆசிரியர்கள் மதிப்பீடு செய்கின்றனர். 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கு இணையான தேர்வுகள் நடைபெறுகிறது. குறுந்தகடு சென்னையில் இருந்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு, அவர்களால் வினாத்தாள் தயாரிக்கப்பட்டு குறுவள மையத்திற்கு வினாத்தாள்கள் வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரிய பயிற்றுநர்களால் அனுப்பப்பட்டு தலைமையாசிரியர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் காலை 9.50க்கு வினாத்தாள் கட்டு பிரிக்கப்பட்டு மாணவர்களுக்கு தேர்வு 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறுகிறது.மேலும் 6 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலையிலும், ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு மாலையிலும் தேர்வு நடைபெறுகிறது. இத் தேர்வுகள் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரி நடை பெறுகின்றது. இம்மாதம் 30ம் தேதி காலாண்டு தேர்வுகள் முடிவடைகின்றது. கொரோனா காலத்திற்குப் பின்பு பள்ளிகள் முழுமையாக இயங்கி தேர்வுகள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருவதால் மாணவர்களுடைய கல்வித்தரங்கள் உயர்வதற்கு சிறப்பான நிலை ஏற்பட்டுள்ளது என ஆசிரியர்கள் கூறுகின்றனர்

Related Stories: