அகஸ்தியன்பள்ளி-திருத்துறைப்பூண்டி அகல ரயில் பாதையில் சோதனை ஓட்டம்

வேதாரண்யம், செப்.28: வேதாரண்யம் தாலுகா அகஸ்தியன்பள்ளி- திருத்துறைப்பூண்டி வரை சுமார் 30 கி.மீ தூரம் அகல ரயில் பாதை அமைத்த பட்டுள்ளது. இதன் சோதனை ஓட்டம் தென்னக ரயில்வே தலைமை பொறியாளர் கோஸ்சாம் தலைமையில் இன்று நடக்கிறது. வேதாரண்யத்தில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் போடப்பட்ட மீட்டர் கேஜ் பாதையில் ரயில் போக்குவரத்து நடைபெற்றது. இந்த மீட்டர்கேஜ் பாதையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் கொல்கத்தாவில் இயக்கியது போல் ஒரு ஆண்டு டாம் ரயில் இயக்கப்பட்டது. அந்த டாம் ரயிலும் சுனாமியின் தாக்கத்தோடு நிறுத்தப்பட்டது. அதன் பிறகு அகஸ்தியன் பள்ளியில் இருந்து திருத்துறைப்பூண்டி வரை அகல ரயில் பாதை மற்றும் திட்டம் அறிவிக்கப்பட்டு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் நேற்றோடு பணிகள் நிறைவு பெற்று இன்று 28ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை அகல இரயில்பாதைசோதனை ஓட்டம் நடைபெறுகிறது. இதற்காக நேற்று அகஸ்தியன் பள்ளியில் இருந்து திருத்துறைப்பூண்டி வரை ரயில் தடத்தில் சரி செய்யும் பணியில் ஊழியர்கள் முழு வீச்சில் ஈடுபட்டனர். தென்னக ரயில்வே திருச்சி பிரிவிலிருந்து சிக்னலை ஆய்வு செய்யும் பணியை அகஸ்தியன்பள்ளி ரயில் நிலையத்திலிருந்து மேற்கொண்டனர். அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு இன்று காலை தென்னக ரயில்வே தலைமை பொறியாளர் கோஸ் சாம் தலைமையில் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. இந்த சோதனை ஓட்டம் முடிந்த பிறகு பாதுகாப்பு அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து, ஜனவரி மாதத்தில் ரயில்சேவை அகஸ்தியன் பள்ளி திருத்துறைப்பூண்டி வரை அகல ரயில் பாதை திட்டத்தில் ரயில் இயக்கப்படும் என ரயில்வே துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: