தாணிக்கோட்டகத்தில் பேரிடர் மேலாண்மை பயிற்சி

வேதாரண்யம், செப்.28: வேதாரண்யம் தாலுக்கா தாணிக்கோட்டகம் ஊராட்சியில் வருவாய் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார். ஒன்றிய குழு உறுப்பினர் வைத்தியநாதன், தகட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி பாலகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  முகாமில் மாவட்ட பேரிடர் பயிற்றுநர்கள் அன்னபூரணி, மணிமேகலை ஆகியோர் கலந்து கொண்டு முதல் நிலை பேரிடர் பொறுப்பாளர்களுக்கு பயிற்சி அளித்தனர்.  பின்னர் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பயிற்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: