மீனவ தொழில் புரிவோரையும் உறுப்பினராக சேர்க்க வேண்டும்

நாகப்பட்டினம், செப். 28: தமிழ்நாடு ஏஐடியூசி மீனவத் தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் சின்னதம்பி தலைமையில் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், பொருளாளர் மகேந்திரன் மற்றும் பலர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். இதில் மீனவர் மற்றும் மீனவர் மகளிர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்க்கப்படவில்லை. எனவே மீனவ தொழில் புரியும் அனைவரையும் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக சேர்த்திட வேண்டும்.

தனக்கு வேண்டிய நபர்களை மட்டும் முன்னுரிமை அளிக்கப்பட்டு கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்க்கப்படுகின்றனர். எனவே மீனவ தொழில் புரியும் அனைவரையும் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக சேர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Related Stories: