பெரம்பலூர் கலெக்டர் எச்சரிக்கை கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் உரிமம் ரத்தாகும்

பெரம்பலூர்,செப்.28:அதிக விலைக்கு உரங்கள் விற் றால் கடும் நடவடிக்கை எடு க்கப்படும் என்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் 621 டன் யூரியா, 868 டன் டி.ஏ.பி., 612 டன் பொட்டாஷ் 2816 டன் காம்ப்ளக்ஸ் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 173 டன் கள் உரங்கள் இருப்பு வைக் கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் செப்டம்பர் மாதத்திற்கு ஒது க்கீடு செய்யப்பட்ட யூரியா உரம் 3300 மெ.டன்களில் இதுவரை 2232 டன்கள் வந்துள்ளது.கடந்த மாத இருப்பில் 1094 மெ.டன் இருந்தது. இதுவ ரை யூரியா 1826மெ.டன்கள் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் மற் றும் தனியார் உர விற்ப னை நிலையங்களில் விநி யோகம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இம்மாதம் 1500 மெ.டன்கள் கூடுதலாகப் பெற நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது. உயி ர் உரங்களான அசோஸ் ப யிரிளம், பாஸ்போ பாக்டீரி யா மற்றும் பொட்டாஷ் பாக் டீரியா இவைகள் அனைத் தும் அனைத்து வட்டார வே ளாண்மை விரிவாக்க மை யங்களில் அதிகஅளவு இ ப்பு வைக்கப்பட்டுள்ளது. இத்தகைய உயிர் உரங்க ளை விதை நேர்த்தி மற்றும் எருவுடன் கலந்துமண்ணு க்கு இடும்போது ஆகாயத் தில் உள்ள தழைச்சத்தை கிரகித்து பயிருக்கு வழங் குகிறது மற்றும் மண்ணில் உள்ள பயன்பாடு அற்ற பா ஸ்பரஸ் மற்றும் பொட்டாஷ் சத்துக்களை பயிருக்கு கி டைக்கும் வகையில் மாற் றம் செய்கிறது. ஆகவே உயிர் உரங்களை பயன்படுத்துவதன் மூலம் உரத் தேவைகளை குறைத்துக் கொள்ளலாம். விவசாயிகள் தங்கள் பயிருக்கு களைக்கொல்லியை பயன்படுத்தும் போது யூரியாவுடன் கலந்து பயன் படுத்துகிறார்கள். இது மிகவும் தவறான முறையாகும்.

மேல் உரமாக யூரியா கிடை க்காத சமயத்தில் மேல் உர மாக காம்ப்ளக்ஸ் உரமான 10:26:26, 12:32:16, 16:16:16, 17:17:17, 15:15:15 போன்ற காம்ப்ளக்ஸ் உரங்களைப் பயன்படுத்தலாம். அனைத்து

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் இப்கோ விற்பனை உரிமம் பெற்ற நிலையங் களில் மத்திய அரசு கூட்டு நிறுவனமான இப்கோஉற்பத்தி செய்யப்படும். நானோ யூரியாஅதிகளவு இருப்பில் உள்ளது. இத்தகைய நா னோ யூரியாவை பயிருக் கு ஒரு ஏக்கருக்கு 1/2 லிட்டர் பயன்படுத்துவதன் மூலம் யூரியா தட்டுப்பாட்டை சரி செய்யலாம். மண்ணில் நன்மை செய்ய க் கூடிய நுண்ணுயிரிகளா ல் தான் செயற்கையான உரங்களை பயிர் எடுத்து க்கொள்ளும் வகையில் மாற்றம் செய்யப்படுகிறது. மண்ணில் நுண்ணுயிர்கள் குறைவதால் பயிருக்க இட ப்படும் அனைத்து செயற் கை உரங்களும் பயிருக்கு கிடைக்காமல் ஆவியாகவு ம் மண் துகள்களுக்கு இ டையில் கிடைக்கா வண் ணம் கரைந்து விடுகிறது. எனவே விவசாயிகள் அ னைவரும் உயிர் உரங்க ளையும், இயற்கையாக கிடைக்கும் உரங்களையும் அதிகளவு பயன்படுத்தி மண் வளத்தை பாதுகாக்க வேண்டும்.

விவசாயிகளின் தேவைக்கு மேல் அதிகமாகவும் மற்றும் இணை உரம் வழங் கக்கூடாது. ஒரே நபருக்கு அதிக அளவு உரம் வழங்க க்கூடாது. குறிப்பிட்ட விவ சாயிகளின் பெயரில் அதிக ப்படியாக உரவிற்பனை செ ய்துள்ளது கண்டறியப்பட் டால் சில்லரை விற்பனை உரிமம் எந்த முன் அறிவிப் பும் இன்றி ரத்து செய்யப்ப டும். விவசாயம் மேற்கொள் ளாத நபர்களுக்கு உரம் வி ற்பனை செய்யக்கூடாது. தி டீர் ஆய்வின்போது மேற்கா ணும் குறைபாடுகள் கண்ட றியப்பட்டால் உர விற்ப னையாளர்களின் விற்ப னை உரிமம் உடனடியாக ரத்து செய்யப்பட்டு அவர்க ள் மீது குற்ற வழக்குத் தொ டரப்படும். விவசாயிகள் தா ங்கள் உரம் வாங்க செல் லும் போது ஆதார் அட்டை யுடன் சென்று உரம் பெற்று க்கொண்டு உரிய பட்டியல் கேட்டு பெற வேண்டும். உர மூட்டையின் மேல் அச்சிடப் பட்ட அதிகபட்ச விற்பனை விலைக்கு மேல் விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவ டிக்கைகள் எடுக்க உத்தரவி டப்பட்டுள்ளது என பெரம்ப லூர் மாவட்ட கலெக்டர் வெ ளியிட்டுள்ள அந்த அறிவிப் பில் தெரிவித்துள்ளார்.

Related Stories: