விராலிமலை அருகே புதிய பகுதி நேர நியாய விலைக்கடை திறப்பு

விராலிமலை, செப்.28: விராலிமலை அருகே பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பகுதி நேர நியாய விலை கடையை கூட்டுறவு துறை பொது விநியோக திட்ட அமலாக்கப் பிரிவு மற்றும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் திறந்து வைத்தனர். விராலிமலை அருகே உள்ள ராஜாளிபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் ராஜாளிப்பட்டியில் புதிய நியாய விலை கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ராஜாளிபட்டி ஊராட்சிக்குட்பட்ட முத்தகவுண்டம் பட்டியை சேர்ந்த பொதுமக்கள் நீண்ட தூரம் வந்து பொருட்கள் வாங்கி செல்லும் நிலை உள்ளதாக கூறி பொதுவிநியோக திட்ட அதிகாரிகளிடம் முத்த கவுண்டம்பட்டி கிராமத்தில் புதிய பகுதி நேர நியாய விலை கடை திறக்க கோரி கோரிக்கை மனு அளித்திருந்தனர்.

அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்ற அதிகாரிகள் ராஜாளிபட்டியில் உள்ள நியாய விலை கடையை பிரித்து முத்தகவுண்டம்பட்டியில் புதிய பகுதி நேர நியாய விலை கடையை திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு துறை பொது விநியோக திட்ட அமலாக்கப் பிரிவு மற்றும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் மற்றும் ராஜாளி பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சின்னசாமி, கவுன்சிலர் முத்துலட்சுமி காளமேகம் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: