கறம்பக்குடி அருகே பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை

கறம்பக்குடி,செப்.28: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே முள்ளங்குருச்சி ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டைக்காடு கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் அப்பகுதியை சுற்றி சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் மற்றும் பல தரப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் மாணவர்களின் நலன் கருதி அரசு உதவி பெறும் தூய வளனார் மேல்நிலை பள்ளி அமைந்து செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் மாணவர்களின் கல்வி வளர்ச்சியை கணக்கில் கொண்டு இப்பள்ளி நிர்வாகம் மற்றும் அன்னை தெரசா பவுண்டேஷன் சார்பாக அப்பள்ளியில் கல்வி முடித்து உயர்கல்வி சென்றுள்ள மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவிதொகை வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் பள்ளியின் முதல்வர் வரவேற்புரை நிகழ்த்தினார். கறம்பக்குடி தாசில்தார் ராமசாமி முன்னிலை வகித்தார். பள்ளியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முள்ளங்குருச்சி ஊராட்சி மன்ற தலைவர் காந்திமதி முருகானந்தம் மற்றும் மதர் தெரசா பவுண்டேஷன் நிறுவன சேர்மன் மற்றும் அறங்காவலர் சபரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தலைமை வகித்து விழாவை சிறப்பித்த புதுக்கோட்டை திமுக சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா கலந்து கொண்டு பள்ளியில் கல்வி பயின்ற 31 மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி தொகையை வழங்கி பேசுகையில்; இந்த கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் அனைத்தையும் நிறைவேற்றி தர பாடுபடுவேன் என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பரிமளம், ஆரோக்கிய சாமி, சேசுராஜ், ஆரோக்கிய ராஜ், கஸ்பர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: