கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் 3ம் தேதி ஆள் சேர்ப்பு

தஞ்சாவூர், செப். 28: கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்ப்பு வருகிற 3ம் தேதி நடைபெறுகிறது. இதில் நேரடியாக நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம் என்று தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் லிமிட், ஒன்றியத்தின், மூலம் கிராமப்புற பால் உற்பத்தியாளர்கள் விவசாயிகளின் கறவைகளுக்கு மருத்துவ வசதி கிடைத்திடவும், மேலும் ஆவின் பால் உற்பத்தியை அதிகரிக்கவும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் 2022-23 வாயிலாக, புதிய கால்நடை மருத்துவ தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது காலியாக உள்ள 4 கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய விருப்பம் உள்ள கால்நடை மருத்துவ பட்டதாரிகள், தங்கள் உரிய பட்டப்படிப்பு, கால்நடை மருத்துவ கவுன்சில் சான்றிதழ்களுடன் வருகிற 3ம் தேதி காலை 11:00 மணிக்கு தஞ்சாவூர் நாஞ்சிகோட்டை சாலையிலுள்ள ஆவின் தலைமை இடத்தில், நேரடியாக நேர்முகத்தேர்வில் கலந்துக்கொள்ளலாம்.www.thanjavur.nic.in என்ற இணையதளத்தின் வாயிலாக விவரங்களை அறிந்துக்கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: