குடவாசல் அருகே இடிவிழுந்து அரசு பள்ளி வளாகம் சேதம்

திருவாரூர்,செப்.28: திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே அரசு பள்ளி வளாகத்தில் இடி விழுந்த சம்பவத்தையடுத்து பள்ளி கட்டிடம் சேதம் அடைந்தது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட சீதக்கமங்கலம் ஊராட்சியில் உள்ள மேலராமன்சேத்தி தெருவில் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 35 மாணவ, மாணவிகள் ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக நள்ளிரவு நேரங்களில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மன்னார்குடி பகுதியில் கடந்த 25ம் தேதி நள்ளிரவு இடி, மின்னல் தாக்கி தந்தை மற்றும் மகன் இறந்தனர். இதனையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவிலும் இதேபோன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக நன்னிலம் பகுதியில் அதிகபட்சமாக 11 செண்டிமீட்டர் மழை அளவு பதிவாகியது.

இந்த கனமழையின் காரணமாக குடவாசல் அருகே மேலராமன்சேத்தி பள்ளி வளாகத்தில் உள்ள தென்னை மரத்தில் இடி விழுந்ததில் அருகில் உள்ள பள்ளி கட்டித்தின் மேற்கூரையும் சேதமடைந்தது. இந்நிலையில் தற்போது பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலாண்டு தேர்வு என்பது தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் பள்ளி கட்டிடம் சேதம் அடைந்துள்ள போதிலும் மாணவ, மாணவிகளை அருகில் உள்ள ஒரு வீட்டில் தற்காலிகமாக ஆசிரியர்கள் மூலம் தேர்வு எழுத வைத்தனர். இருப்பினும் சேதமடைந்த கட்டிடத்தை உடனடியாக சீரமைத்திட வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தனியார் மருத்துவமனைக்கு இணையாக மருத்துவ மனையின் சுற்றுப்புற தூய்மை பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் மருத்துவர்கள் இளைஞர்களாக இருந்தாலும், வருகின்ற நோயாளிகளிடம் காட்டுகின்ற கனிவும், நோய் பற்றி அறிந்து மருந்து வழங்கும் விதம் பாராட்டுக்குரியது. ஒரு சில நேரங்களில் மருத்துவர்களே, கட்டு கட்டும் இடத்திற்கு வந்து, சிகிச்சை மேற்கொண்டு கட்டிய நிகழ்வுகளும் மருத்துவமனையில் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.

Related Stories: