திருச்சியில் உடலில் அணியும் நவீன கேமராவுடன் போலீசார் வாகன தணிக்கை

திருச்சி, செப்.28: திருச்சியில் உடலில் அணியும் நவீன கேமராவுடன் போலீசார் வாகன தணிக்கையில் நேற்று ஈடுபட்டனர். திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் மாநகரத்தில் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கவும், குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறா வண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், மக்களின் நலனை பேணிகாக்கவும், ரோந்து பணி செய்யவும், காவல்துறையினருக்கு உரிய அறிவுரை வழங்கி வருகிறார். இந்நிலையில், தமிழக அரசால் திருச்சி மாநகருக்கு 12 உடலில் அணியும் நவீன கேமிராக்கள் வழங்கப்பட்டது.(பணியின் போது சம்பவ இடத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் பதிவு செய்வது). இந்த 12 கேமராக்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் உத்தரவுப்படி மாநகரத்தில் உள்ள 6 போக்குவரத்து காவல் நிலையங்களுக்கு தலா 2 வீதம் 12 வழங்கப்பட்டன.

இந்நிலையில், திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் நேற்று போக்குவரத்து போலீசார் உடலில் அணியும் நவீன கேமராவுடன் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை தடுத்து சோதனையிட்டனர். தொடர்ந்து, வாகனங்களின் ஆவணங்களை, அதன் உரிமையாளர்களிடம் போலீசார் கேட்டறிந்தனர். இந்த நிகழ்வுகள் அனைத்தும் நவீன கேமராவில் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: