ஹவுரா- புதுச்சேரி ரயிலில் கஞ்சா எண்ணெய்யுடன் ஒரிசா மாநில வாலிபர் கைது

திருச்சி, செப்.28: திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு நேற்று ஹவுரா- புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் விழுப்புரம் ரயில் நிலையம் வந்தது. அப்போது ரயிலில் விழுப்புரம் ரயில்வே போலீஸ் சப்இன்ஸ்பெக்டர்அசோகன் மற்றும் போலீசார் வினோத்குமார், சிவராமன், விஜய் மற்றும் கிருஷ்ணராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் சோதனை செய்தனர்.

அப்போது ரயிலில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற ஒரு வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். மேலும் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.

அந்த பையில் சுமார் 2 கிலோ 50 கிராம் கஞ்சாவும், 900 கிராம் எடை கொண்ட கஞ்சா எணணெய்யும் இருந்தது. இதையடுத்து அந்த வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதில் அவர், ஓரிசா மாநிலம் முகிர்வன் மாவட்டம் உமிர்தார் பகுதியை சேர்ந்த ரமேஷ்கிரி சிலிம்பாபிசி என்று தெரிய வந்தது.  இதையடுத்து கஞ்சா, மற்றும் கஞ்சா எண்ணெயை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். இதையடுத்து கைதான வாலிபர் மற்றும் கஞ்சாவை நுண்ணறிவு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பத்தமஸ்ரீயிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: