கோவில்பட்டியில் புகையிலை பொருட்கள் பதுக்கிய 2 பேர் கைது

கோவில்பட்டி, செப். 27: கோவில்பட்டியில் புகையிலை பொருட்கள் பதுக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ் மேற்பார்வையில் மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ்ஆனந்த், எஸ்ஐ அரிக்கண்ணன் மற்றும் போலீசார், இனாம்மணியாச்சி பைபாஸ் ரோட்டில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது புகையிலை பொருட்கள் கடத்தி வந்த கோவில்பட்டி மந்தித்தோப்பு கணேஷ்நகர் மேட்டுத்தெருவைச் சேர்ந்த தங்கவேலு (41) என்பவரை கைது செய்தனர். இவரிடம் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோடு காமராஜ் நகரைச் சேர்ந்த வேல்முருகன் (50) என்பவர் வீட்டில் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Related Stories: