கோயில் விழாவையொட்டி பந்தக்காட்சி ஊர்வலம்

தர்மபுரி, செப்.26:  தர்மபுரி குமாரசாமிப்பேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோயில், 86ம் ஆண்டு திருவிழா கடந்த 20ம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து இடும்பன் ஊர்வலம், சக்தி கரகம் அழைத்தல் நடந்தது. பின்னர் மாரியம்மன், செல்லியம்மன் மற்றும் விருந்தாடியம்மனுக்கு கூழ் ஊற்றும் விழா, விருந்தாடியம்மன், செல்லியம்மன் மற்றும் மாரியம்மன் கோயிலுக்கு மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. விழாவின் இறுதி நிகழ்ச்சியாக, நேற்று அதிகாலை தர்மபுரி ராஜகோபால் கவுண்டர் பூங்கா அருகில் இருந்து, ரிஷப வாகனத்தில் மாரியம்மன் பந்தக்காட்சி ஊர்வலம் நடந்தது. முக்கிய விதிகள் வழியாக நடைபெற்ற இந்த ஊர்வலத்தில், 500க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பக்தர்கள் தீப்பந்தங்கள் ஏந்தி பங்கேற்றனர். ஊர்வலம் குமாரசாமிப்பேட்டையை சென்றடைந்ததும், பக்தர்கள் வண்ண பொடிகளை தூவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம், கும்ப பூஜை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் செங்குந்தர் சமூகத்தினர் செய்திருந்தனர்.

Related Stories: