திருமணமான ஒன்றரை ஆண்டில் இளம்பெண் தூக்குபோட்டு சாவு

புதுச்சேரி, செப். 27:  திருமணமான ஒன்றரை ஆண்டில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக அவரது கணவரிடம் தாசில்தார் விசாரணை நடத்தி வருகிறார். புதுச்சேரி லாஸ்பேட்டை சாமிபிள்ளை தோட்டம் தவமணி நகரைச் சேர்ந்தவர் பாலாஜி (25), பெயிண்டர். இவருக்கும் லாஸ்பேட்ைட, மகாவீர் நகரில் வசிக்கும் முருகவேல் என்பவரின் மகள் சுபாவுக்கும் (20) ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. அவர்களுக்கு 6 மாத பெண்குழந்தை உள்ளது. இதற்கிடையே பெயிண்டரான பாலாஜி அவ்வப்போது ேவலைக்கு சென்றுவிட்டு குடித்துவிட்டு வந்தாராம். சம்பவத்தன்று கணவர் மது அருந்த செல்லவே, மகாளய அமாவாசையொட்டி சுபா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று  அங்கிருந்து கணவர் வீட்டுக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்தாராம்.  இதனை பாலாஜி தட்டிக் கேட்டதாக தெரிகிறது. இதையடுதது அவரிடம் கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு திரும்பிய அவர், அங்குள்ள அறையில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 சிறிதுநேரத்திற்குபின் தனது மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்த பெற்றோர், கதறி அழுதனர். பின்னர் இதுபற்றி லாஸ்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். எஸ்ஐ திருமுருகன், ஏட்டு சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுபாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமத்துக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது சாவுக்கான காரணம் குறித்து தந்தை முருகவேலிடம் புகாரை பெற்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கணவருடன் தகராறில் அவர் தற்கொலை முடிவை எடுத்தாரா அல்லது வேறு காரணமா? என்பது குறித்து விசாரணை நடக்கிறது. இதனிடையே சுபாவுக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளே ஆவதால் வரதட்சணை கொடுமையால் அவர் தற்கொலை செய்தாரா? என்பது குறித்து தாசில்தார் விசாரணையும் நடைபெற்று வருகிறது.

Related Stories: