×

இல்லம் தேடிக் கல்வி விரைவு மதிப்பீடு பணி

திட்டக்குடி, செப். 27: இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் செயல்பாடுகளைப் பற்றி விரைவு மதிப்பீடு செய்யும் பணி திட்டக்குடி தொடக்கப்பள்ளியில் நடந்தது. வட்டாரக்கல்வி அலுவலர் மாதம்மாள் தலைமை தாங்கினார். வளமைய மேற்பார்வையாளர்(பொ) பன்னீர்செல்வம் மதிப்பீட்டு பணியை தொடங்கி வைத்தார். மாநில கணக்கெடுப்பாளர் அபிதா திட்டச் செயல்பாடுகள் பற்றி ஆசிரியர்கள், பெற்றோர்கள், இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர்கள் ஆகியோர்களிடம் வினாக்கள் கேட்டு செயலியில் பதிவுகள் செய்தார். இதேபோல் கோழியூர், கீரனூர், மேலாதனூர், ஆவட்டி, பெரங்கியம், மங்களூர், பனையாந்தூர் ஆகிய பள்ளிகளிலும் இந்த மதிப்பீட்டுப் பணி நடைபெற உள்ளது. தலைமையாசிரியர் அமுதா வரவேற்றார். இல்லம் தேடிக் கல்வி ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் வழியரசன் நன்றி கூறினார்.

Tags :
× RELATED காந்தி ஜெயந்தி, மிலாடி நபி 2 நாட்கள் மதுக்கடைகளை மூட உத்தரவு