அரசு பள்ளி, கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு

குறிஞ்சிப்பாடி, செப். 27:    உலக சாதனைக்காக, கடலூர் மாவட்டத்தில் அரசு கட்டிடங்களில் அமைக்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை நடுவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். உலக சாதனைக்காக, கடலூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் அரசு கட்டிடங்களில் ஒரே மாதிரியான மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் 1600 இடங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பணிகளை பார்வையிட  குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு கோயம்புத்தூரை சேர்ந்த நடுவர் அமித் கே சிங்கரோணி வருகை தந்தார். பூவானி குப்பம், அகரம், அம்பலவாணன் பேட்டை ஆகிய கிராமங்களில் அரசு கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அவர் பார்வையிட்டார்.

 தொடர்ந்து, கல்குணம்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை பார்வையிட்டு, பணியின் தரத்தை ஆய்வு செய்தார். கருங்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அரசு உயர்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளையும்  ஆய்வு செய்தார். கோ.சத்திரம் பகுதியில் அரசு கட்டிடங்களில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளையும் ஆய்வு செய்தார்.

 பொறியாளர்கள் ரத்தினவேல், நவீன்குமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள் பங்கேற்றனர்.

Related Stories: