×

மனு கொடுத்த 10 நிமிடத்தில் சேர்மன் அதிரடி நடவடிக்கை

பண்ருட்டி, செப். 27:  பண்ருட்டி நகராட்சிக்குட்பட்ட 19வது வார்டு பகுதியில் 20 வருடமாகவே கழிவுநீர் வாய்க்கால், சாலை வசதிகள் இல்லை. அப்பகுதி மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். இரண்டு முறை அதிமுக கவுன்சிலர்கள் இருந்தும் எந்த ஒரு வசதியும் செய்து கொடுக்க முன்வரவில்லை. இந்நிலையில் அப்பகுதியில் வசித்து வரும் ஓய்வு பெற்ற தாசில்தார் நந்தகோபால் இதுகுறித்து பொதுமக்களுடன் இணைந்து நேற்று நகராட்சி சேர்மன் ராஜேந்திரனிடம் கோரிக்கை மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்டவுடன் நகராட்சி பணியாளர்களை அழைத்து கொண்டு சம்பந்தப்பட்ட இடத்திற்கு உடனே சென்று சேர்மன் ராஜேந்திரன் ஆய்வு செய்தார். பின்னர் அருகில் இருந்த பணி ஆய்வாளரிடம் பணிகள் செய்ய பூர்வாங்க திட்ட அறிக்கை தயாரித்து நடவடிக்கை உத்தரவிட்டார். ஆய்வின் போது உதவி பொறியாளர் மணி, பணி ஆய்வாளர் சாம்பசிவம், கவுன்சிலர்கள் சமீம் பேகம் சலீம், ராமலிங்கம், முத்துவேல், இளைஞரணி அமைப்பாளர் சம்பத், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பார்த்திபன், ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு